பழநி: போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இத்தலத்திற்கு ‘சித்தன்வாழ்வு என்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் ‘பழநியாண்டி என்று அழைப்பர். இத்தகைய சிறப்பு மிக்க தலத்தில் முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.