தேவகோட்டை: தேவகோட்டை, கீரணி கிராமத்தில் துõது ஜெயங்கொண்ட அய்யனார் கோயிலில் திருப்பணி நடந்ததை தொடர்ந்து நேற்று காலை 9.40 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமசாமி, சொர்ண லிங்கம், எம்.பி. செ ந்தில்நாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாண்டி, ஒன்றிய தலைவர்கள் சவுந்தரம், செல்வி, நகராட்சி தலைவி கற்பகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கீரணி கிராமத்தினர் செய்து இருந்தனர்.