பதிவு செய்த நாள்
13
ஜூன்
2014
03:06
நாமக்கல்: நாமக்கல் ஐயப்பன் கோவிலில், வரும், 15ம் தேதி, பாரதீய கிஷான் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், கோமாதா பூஜை நடக்கிறது.நாமக்கல் மாவட்ட, பாரதீய கிஷான் சங்கம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், வரும், 15ம் தேதி, காலை, 8 மணிக்கு, நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், கோமாதா பூஜை நடக்கிறது.வக்கீல் வேலு தலைமை வகிக்கிறார். மாவட்ட கிஷான் சங்க தலைவர் நமச்சிவாயம், நகர செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் நவலடி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பூர்ண சேவானந்தா மகராஜ், சத்யோஜாதக கருணா ஸ்வாமி, பாரதீய கிஷான் சங்க தென்பாரத அமைப்பாளர் கணேசன் ஆகியோர் பேசுகின்றனர்.