பதிவு செய்த நாள்
13
ஜூன்
2014
03:06
பேரம்பாக்கம்;பேரம்பாக்கத்தில் உள்ள அகோர வீரபத்திர சுவாமி கோவில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது அகோர வீரபத்திர சுவாமி கோவில். இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, புதிதாக பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் பஞ்சலோக திருமேகி அமைத்து கோவில் சீரமைக்கப்பட்டது. இந்த கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 10ம் தேதி மகா கணபதி ஹோமமும், புதிய சிலைகளுக்கு கரிக்கோலம் நிகழ்ச்சியும், அதன்பின், மாலை பூர்வாங்கம் கும்ப அலங்காரமும், பூர்ணாஹூதியும் நடந்தது.பின், கடந்த 11ம் தேதி காலை 9:00 மணிக்கு 2ம் கால யாக பூஜையும், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும், அதன்பின், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும். பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு, புனர் பூஜையும், அவபிருதியாகம் மகா பூர்ணாஹூதியும் நடந்தது. பின் காலை 11:15 மணிக்கு மூலவர் மற்றும் கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 8:00 மணிக்கு வீரபத்திரர் திருவீதி உலா நடந்தது.