பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
11:06
பழநி: பழநி, பெரியநாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயில் முத்துகுமாரசுவாமி மண்டபத்தில் காலை 11 மணிக்குமேல் ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியும், திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திகள் கோயிலை வலம் வந்தனர். அதன்பின் சிவன், பார்வதி, திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்யப்பட்டது. அம்பாளிடமிருந்து, பொற்கிண்ணத்தில் ஞானப்பால், திருஞானசம்பந்தருக்கு ஊட்டப்பட்டது. அதன்பின், ஞானப்பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், ராகவன் செய்திருந்தனர். நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.