பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
02:06
காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தை வீதி, ஸ்ரீராஜகணபதி கோவிலில், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு இன்று நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, ஸ்ரீராஜகணபதிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு, அருள் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, தேவகான்டலா இளைஞர் மன்றத்தினர் செய்துள்ளனர். *கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மெயின் ரோடு, சக்தி விநாயகர் கோவிலில், மாலை, 6 மணிக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சக்தி விநாயகருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.
* காவேரிப்பட்டணம் அடுத்த, பெண்ணேஸ்வரர் கோவில் உள்ள, சங்கடஹர கணபதிக்கு, இரவு, 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.
* தர்மபுரி எஸ்.வி., ரோடு, சாலை விநாயகர் கோவில், தர்மபுரி நெசவாளர் காலனி சக்திவிநாயகர், வேல்முருகன் கோவில், குமாரசாமிபேட்டை விநாயகர் கோவில், பாலக்கோடு ஞானபிள்ளையார் கோவில் உட்பட, மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.