திருப்பதி கோயிலுக்கு ஆக்டோபஸ் படை பிரிவு பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2014 12:06
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் பாதுகாப்புக்கு ஆக்டோபஸ் படையின் சிறப்புப்பிரிவை ஏற்படுத்த உள்ளனர்.பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளின், ஹிட் லிஸ்ட்டில், திருமலை ஏழுமலையான் கோயில் உள்ளதால், கோயிலின் பாதுகாப்பை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக, மத்திய உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததால், ஆக்டோபஸ் படைப் பிரிவு ஏற்படுத்தப்பட்ட பின், அதில் உள்ள, 90 பேர் கொண்ட குழு மூலம், திருமலைக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.