திருக்கழுகுன்றம்: திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் சார்பில், திருஞானசம்பந்தர் இசை விழா வேதமலை அடிவாரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணிக்கு கோயில் நாகஸ்வர வித்வான் டி.க.தீனதயாளன் குழுவினரின் சிறப்பு நாகஸ்வர இசையும், மாலை 4 மணிக்கு கோயில் ஓதுவார் சி.சொக்கலிங்கம் குழுவினரின் தேவார இன்னிசையும் நடைபெற்றது.