மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பணி: முதல்வர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2014 11:06
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் திருப்பணிகளை, முதல்வர் ஆய்வு செய்தார். மணக்குள விநாயகர் கோவிலை, புனரமைப்பு செய்வதற்காக, இந்து அறநிலையத் துறை சார்பில், ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் திருப்பணிகளை, முதல்வர் ரங்கசாமி,நேற்று ஆய்வு செய்தார். இந்து அறநிலையத் துறை ஆணையர் மோகன்தாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.