பதிவு செய்த நாள்
20
ஜூன்
2014
12:06
நாகப்பட்டினம்: ராகு,கேது பெயர்ச்சிக்காக புனித தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,கும்பகோணம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு,ராகு,கேது பெய ர்ச்சி விழா வரும் 21 ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, கும்பகோணம்- திருநாகேஸ்வரம், ஆடுதுறை-திருநாகேஸ்வரம்,மயிலாடுதுறை-கீழப்பெரும்பள்ளம், சீர்காழி-கீழப்பெரும்பள்ளம், நன்னிலம்-திருப்பாம்புரம், பேரளம்-திருப்பாம்புரம், மயிலாடுதுறை - திருப்பாம்புரம், காரைக்கால் - தி ருப்பாம்புரம், கும்பகோணம் - திருப்பாம்புரம் ஆகிய கோவில் தலங்களுக்கு,தமிழ்நாடு, அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.