விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் ÷ காவில் உண்டியல் பிரித்து காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் நேற்று நடந்தது. இப்பணியில் கோவில் செயல் அ லுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன், 20 கோவில் ஊழியர்கள், 30 தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். உண்டியல்களில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 671 ரூபாய், 30 கிராம் தங்கம், 2,340 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. கடந்த மார்ச் மாதம் உண்டியல் எண்ணியபோது 10 லட்சத்து 74 ஆயிரத்து 825 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.