பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் மேற்பார்வையில் உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் 2 லட்சத்து 5,093 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.