பதிவு செய்த நாள்
23
ஜூன்
2014
12:06
பேரூர் : கீழ் சித்திரைச்சாவடி உமாமகேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேக விழா, வரும் 27ல் நடக்கிறது. அதிகாலை 4.15 மணிக்கு, சங்கல்பம், ஆவாஹணம் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, கணபதி, சுப்ரமணியர், சிவதுர்க்கை, சிவசண்டிகேஸ்வரர், தன்வந்திரி, நவக்கிரக ஹோமங்கள் நடக்கின்றன. பின் காலை, 6.15 மணிக்கு, மகா பூர்ணாஹுதி நடத்தப்பட்டு, 7.00 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது. இறுதியாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனையுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை, ராஜராஜேஸ்வரி பிரார்த்தனா டிரஸ்ட் தலைவர் ஆத்மா தலைமையிலான குழு செய்து வருகிறது.