பதிவு செய்த நாள்
23
ஜூன்
2014
12:06
கள்ளக்குறிச்சி : விருகாவூர் சர்க்கரை விநாயகர் கோவிலில் மண்டல சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் ஸ்ரீசர்க்கரை விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், சிவசக்தி அம்மன் கோவிலில் கடந்த 12ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் மாலை 6 மணியளவில் மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடக்கிறது.சர்க்கரை விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீநிவாச பெருமாள், சிவசக்தி அம்மன், மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடக்கிறது.இதில், ஏராளமான பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருகாவூர் கிராம பொதுமக்கள் மற்றும் துளுவ வேளாளர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.