குரு, ராகு கேது கிரகங்கள் தற்போதுபெயர்ச்சியாகியுள்ளன. இவை தரும் கெடுபலன்கள்குறைய மாதம் ஒரு தானம் செய்யலாம்.என்ன தானம் கொடுத்தால் நல்லது தெரியுமா?
சித்திரை - பலகாரம், நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர்ச்சாதம் வைகாசி - பானகம், ஈயப்பாத்திரங்கள், வெல்லம் ஆனி - தேன் ஆடி - வெண்ணெய் ஆவணி - தயிர் புரட்டாசி - சர்க்கரை ஐப்பசி - உணவும் புத்தாடையும் கார்த்திகை - பால், விளக்கு மார்கழி - பொங்கல், கம்பளி தை - பச்சரிசி, தயிர் மாசி - நெய் பங்குனி - தேங்காய்
ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல் திங்கள் - பால் செவ்வாய் - வாழைப்பழம் புதன் - வெண்ணெய் வியாழன் - சர்க்கரை வெள்ளி - ஜீனி சனி - நெய்
மாதம் ஒருநாளோ, ஏழுநாள் தொடர்ச்சியாகவோ,உங்கள் இஷ்ட தெய்வ கோயிலுக்குச் சென்று பக்தர்களுக்கு அவரவர் சக்திக்கேற்ப தானம் செய்யலாம். ஆண்டு முழுவதும் தானம் செய்பவர்களுக்கு மறுபிறப்பே இல்லை.