குருவித்துறை:குருவித்துறை சித்திர ரதவல்லபபெருமாள் கோயிலில் குருபகவானுக்கு தனிசன்னதி உள்ளது. ஜூன் 13ல் மிதுனம் ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியானார். இதையொட்டி 48 நாட்கள் மண்டலபூஜை நேற்று துவங்கியது. இப்பூஜையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகாரபூஜை, அர்ச்சனை நடக்கிறது. நேற்று மழைவேண்டி, உலகநன்மைக்காக சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுமதி, ஊழியர் வெங்கடேசன் செய்திருந்திருந்தனர்.