திருக்கோவிலூர் கும்பாபிஷேகம் யாகசாலை அமைக்கும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2014 12:06
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 4ம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திரு விக்ரம சன்னதி பிரகாரங்கள் புதுப்பித்து வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் திரிவிக்ரமசுவாமி, புஷ்பவல்லி தாயார், ராமர், வரதராஜர், விஷ்ணு துர்க்கை, வாமனர் சன்னதிகள். கோவில் விமானங்கள், கருடன், துவார பாலகர்கள், ஸ்ரீபீடம், மடபள்ளி மண்டபங்கள், பிரகாரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான கும்பாபிஷேகம் ஜூலை 4ம் தேதி 9.10 மணிக்கு நடக்கிறது. முன்னதாக வரும் 30ம் தேதி யாசகாலை பூஜைகள் துவங்குகிறது. இதற்காக யாகசாலைகள் நேர்த்தியாக வடிவமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகத் தினர் செய்து வருகின்றனர்.