விழுப்புரம்: திருவாமாத்தூர் முத்தாமபிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு அபிராமேஸ்வரருக்கு மகா தீபாராதனை, 6:30 மணிக்கு பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.