பதிவு செய்த நாள்
27
ஜூன்
2014
12:06
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டி, புதுஆத்தூர் கிராமத்தில் உள்ள, ஸ்ரீகணபதி, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலின், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வரும் 9ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி, 8ம் தேதி காலை 7 மணிக்கு, வேத அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, கணபதி ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும், காவிரி தீர்த்த வரவேற்பு நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, கர்த்தா சங்கல்ப்பம், புண்யாகம், வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரம், ரக்ஷாபந்தனம், யாகசாலைப்ரசேம், மூலமந்திர, மாலா மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, 9ம் தேதி காலை 9 மணிக்கு, மஹா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு அடுத்து, 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.