கோவை: விநாயகர் சதுர்த்திக்கு, கோவையில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய சிவசேனா முடிவு செய்துள்ளது. மாநகர் மாவட்ட சிவசேனா செயல்வீரர்கள் கூட்டம், ம.ந.க., வீதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஹரிஹரன் தலைமை வகித்தார். கோவையில், ஆக., 29ல் துவங்கி ஐந்து நாட்கள் விநாயகர் சதுர்த்தி, இந்து ஒற்றுமை விழாவாக கொண்டாடப்படும். கோவை மாநகரில் அமைப்பு சார்பில், 31 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை மாவட்ட இளைஞரணி தலைவராக சிவகுமார், செயலாளராக கோபால் சிங் மோக், பொருளாளராக சத்திய நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.