பதிவு செய்த நாள்
30
ஜூன்
2014
01:06
சடைச்சி அம்மன் என்ற பெண், சிவன்மலை சுப்ரமணியர் கோவிலில் பணி விடை செய்து வந்துள்ளார். அவர், கங்கையின் சிறப்பு அறிந்து, கங்கை செல்ல வேண்டும் என வேண்டியுள்ளார். முருகன், அவருக்கு, காசி, கங்கை தீர்த்தத்தை உருவாக்கி, காசியை காட்டியுள்ளார். தற்போது, நந்தவனமாக உள்ள பகுதியில், கங்கை, காசி தீர்த்தம் உள்ளதாக ஐதீகம் உள்ளது.
தனக்கு பணி விடை செய்த சடைச்சிக்கு, கங்கை தீர்த்தத்தை காட்டியது மட்டுமின்றி, அவருக்கு தனது மலைக்கு வரும் படிக்கட்டுகளில், 18ம் படியை வழங்கியும் சிறப்பித்துள்ளார். அது, சத்தியப்படி என்றழைக்கப்படுகிறது. ஊர் பெரியவர்கள், இந்த படியில் அமர்ந்து, மக்கள் கொண்டு வரும் வழக்குகளுக்கு, முருகன் அருளால் தீர்ப்பு கூறியதால், சத்தியப்படி என குறிப்பிடப்படுகிறது.கற்பந்தல்கள் என அழைக்கப்படும், மண்டபங்கள், படியில் ஏறி வருபவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளன. அற்புதமான வேலைப்பாடு, நான்குபுறமும் படித்துறைகள் கொண்ட பெரிய குளமும் உள்ளது.
நான்குபுறங்களும் விளக்கு மாடங்களும் உள்ளன. தைப்பூச தீர்த்தவாரி திருவிழா, இக்குளத்தில் நடந்து வருகிறது. இங்கு அனுமன் தீர்த்தம், அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உள்ளதாகவும் ஐதீகம் உள்ளது. சிவன்மலை முருகனுக்கு, பெரிய தேர், தங்கத்தேர் உள்ளதும், தை பூசத்தேர்த்திருவிழா சிறப்பாகவும், மலை அடிவாரத்தில் பல அன்னதான மண்டபங்கள் உள்ளதால், அன்னதான மூர்த்தியாகவும் உள்ளார்.
கோவில்களில் சில நாட்கள் மட்டுமே விழாக்கள் இருக்கும். சிவன்மலையில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடக்கின்றன. சித்திரை கனி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை ஜோதி, மார்கழி மாத சிறப்பு பூஜை, திருவாதிரை, தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி என ஒவ்வொரு மாதமும் விழா களை கட்டுகிறது. திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளும் சுப்ரமணியரை வணங்கினால், திருமணம் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளதால், பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறி, திருமணத்தை சிவன்மலையில் நடத்துகின்றனர். இதனால், முகூர்த்த நாட்களில், இப்பகுதியில் அதிக திருமணம் நடக்கும் கோவிலாகவும் உள்ளது. அதேபோல், குழந்தை வரம் வேண்டுபவர்களின் மனக்குமுறலுக்கும் தீர்வு கிடைக்கிறது. இதற்கு காரணம் தல விருட்ஷம்...
நாளை ..