பதிவு செய்த நாள்
30
ஜூன்
2014
01:06
சேலம்: ரம்ஜான் நோன்பு, நேற்று சேலத்தில் துவங்கியது. சேலம் மாவட்ட இஸ்லாமிய நலச்சங்க தலைவர் ஜாகிர் ஹூசைன் கூறியதாவது: ஆண்டுதோறும், ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள், நோன்பு இருந்து இறைவனை வழிப்படுவது வழக்கம். இறைவனின் ஐந்து கட்டளைகளில், நான்காவது கட்டளை, நோன்பிருத்தல். நேற்று முன்தினம் பிறை தெரியாத காரணத்தால், முறைப்படி, இன்று (நேற்று), ரமலான் நோன்பு துவங்கி விட்டது. நோன்பு இருப்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் பெறுவது ஒருபக்கம் இருந்தாலும், ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் வாடும் ஏழையின் பசியை உணரவே, 30 நாள் நோன்பிருந்து, சிறப்பு தொழுகை நடத்துகிறோம். நோன்பு நிறைவு நாளில், ஏழைகளுக்கு தானம் செய்து, ஈகையை வெளிப்படுத்தி, அந்நாளை, ஈகை திருநாளாகவே கொண்டாடப்படுகிறது. நோன்பு துவங்கும் நேரம் (சகர்), திறக்கும் நேரம் (இப்தார்) வகைப்படுத்தப்பட்டு, அதன்படி, இஸ்லாமியர்கள், இறை கடமையை நிறைவேற்றுவர். இவ்வாறு அவர் கூறினார்.