பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
12:07
சென்னை: வைஷ்ணவ தேவி, ஆச்சார்ய துளசி முனிவர் உருவங்கள் பொறிக்கப்பட்ட, புதிய ஐந்து ரூபாய் நாணயங்களை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பெரும்பாலான மக்களால் வணங்கப்படும், வைஷ்ணவ தேவி மற்றும் சமண மதத்தினரால் வணங்கப்படும், ஆச்சார்ய துளசி முனிவர் உருவங்கள் பொறிக்கப்பட்ட, தனித்தனி ஐந்து ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. துளசி முனிவர், புகழ்பெற்ற எழுத்தாளர், பேச்சாளர், சமண மதத்தினரின் வழிகாட்டி. அனைவரும் பின்பற்றக் கூடிய எளிய வாழ்க்கையைப் பின்பற்றியவர்.இந்த நாணயங்களை, அனைத்து மதத்தையும் சார்ந்த பெரும்பாலான மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.நாணயத்தில், துளசி முனிவரின் பொன்மொழியான, ’தர்மத்தின் மொழி, ஜாதி, மதம் போன்றவைக்கு அப்பாற்பட்டது’ என, பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நாணயத்தை, சுகால் குழுமத்தினர், மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு, இலவசமாக வழங்குகிறது என, அக்குழுமத்தை சேர்ந்த சுகால்சந்த் ஜெயின் கூறியுள்ளார்.