திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள். அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கண்ணுக்கத் தெரியாத சரஸ்வதி ஆறும் வந்து கலப்பதாக நம்பிக்கை. இங்கு, கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.