செஞ்சி: செஞ்சி தாலுகா ஆனாங்கூர் பூரணி, பொற்கலை உடனான ஐயனாரப்பன் கோவிலில் தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடந்தது. கடந்த 6ம் தேதி மாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடு, திருமகள், நிலத்தேவர் வழிபாடு, காப்பு அணிவித்தல் நடந்தன. 6 மணிக்கு முதல்கால வேள்வியும், 8 மணிக்கு வேள்வி நிறைவு பேரொளி வழிபாடும் நடந் தது. நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6.30 மணிக்கு மூர்த்திகளுக்கு ஆனைந்தட்டல், 6.45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 8 மணிக்கு வேள்வி நிறைவு திருமுறை விண்ணப்பம், 8.30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும். 9.30 மணிக்கு விநாயகர், பூரணி, பொற்கலை உடனான ஐயனாரப்பனுக்கு திருக்குட நன்னீராட்டும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.