விழுப்புரம்: ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவி லில் வரும் 13ம் தேதி மகா சிர வண தீபம் ஏற்றப்படுகிறது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வரும் 13ம் தேதி மதியம் 1:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பெருமாள், கனகவல்லி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 5:30 மணிக்கு மகா சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. ஏற்பாடுகளை பத்திரி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.