கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, சிவாஜி நகர் ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி கோவில் பிரம்மோற்சவ விழா, அம்மாள் திருக்கல்யானம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. கிருஷ்ணகிரி, சிவாஜி நகர் ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் பண்டரி பஜனை நடந்தது. நேற்று சிவாஜி ஜெயந்தி விழாவும், கோபால காலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, விட்டல் ரகுமாயி கல்யாண உற்சவம் இன்று காலை, 11 மணிக்கு நடக்கிறது. மாலை, 4 மணிக்கு விநாயகர், விட்டல் ரகுமாயி, அம்மா பவானி உற்சவ மூர்த்திகள் தேர் அலங்காரத்துடன் கிருஷ்ணகிரி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடக்கிறது.14ம் தேதி அகண்ட நாம நிகழ்ச்சியும், மங்களார்த்தியும் நடக்கிறது. 15ம் தேதி காலை வசந்த உற்சவம் நடக்கிறது.