ஊத்துக்கோட்டை: அடைக்கல அன்னை ஆலயத்தின், 24ம் ஆண்டு விழாவை ஒட்டி, தேர் பவனி நடந்தது. ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ளது அடைக்கல அன்னை ஆலயம். இதன், 24ம் ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. கடந்த, 6ம் தேதி கொடி ஏற்றம் நிகழ்ச்சியுடன் துவங்கிய விழாவில், ஒவ்வொரு நாளும், ஜெபமாலை திருப்பலி, புதுநன்மை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு, தேர் திருவிழா நடந்தது. இதில் அன்னை மேரி மாதா சிறப்பு அலங்காரத்தில், அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.