பதிவு செய்த நாள்
15
ஜூலை
2014
12:07
செஞ்சி: விழுப்புரம் அருகே உள்ள அரியலூர் திருக்கை கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 13ம் தேதி காலை 10 மணிக்கு மகா கணபதி ஹோமமும், மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தனபூஜை, கும்ப அலங்காரம், ருத்திரன், விஷ்ணு, துர்கா ஹோமமும் நடந்தது. இரவு 8 மணிக்கு 108 மூலிகைகளை கொண்டு விசேஷ ஹோமம், இரவு 9 மணிக்கு தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு மங்கள இசை, கோபூஜை, வேதிகா பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச் சனை, கன்னியா பூஜை, சகல காயத்ரி ஹோமங்களும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.15 மணிக்கு சிவஜோதி மோன சித்தர் சுவாமிகள் தலைமையில் கடம் புறப்பாடு, 9.20 மணிக்கு மகா கும்பாபிஷேம் நடந்தது. 9.30 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.