பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
04:07
பூரிபுவனேஸ்வர் நெடுஞ்சாலையில் (36 கி.மீ.) உள்ளது பிப்பிலி கிராமம். ஜெகந்நாதர் வழிபாடு மரபைச் சார்ந்த கைவினை நுணுக்கத் திறமையை வெளிப்படுத்துவதே இந்தப் பிப்பிலி கலை வண்ணம். மிகப் பிரகாசமான, திண்ணிய நிறமுள்ள துணியில், ஜியோமிதி வடிவங்கள், அழகான பூக்கள், நவகோள்கள், மிருகம், பறவை உருவப் படிவங்களை வரைந்து, வெட்டி எடுத்து, கருமை நிறப் பின்னணியுடைய துணியின் மேல் வைத்துக் கையினால் தைப்பார்கள். இப்படி ஒப்பிட்டு, வேறுபடுத்திக் காட்டும்போது ஒளிரும் கலைத்திறன் நம்மை வியக்க வைக்கும். கோவில் விதான அலங்காரம். குடை, பர்ஸ், தோரணம் விளக்கு மறைப்பு, அலங்காரக் கைப்பை, படுக்கை விரிப்பு முதலியவை இதில் அடங்கும்.