Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்திரைப் பவுர்ணமி அதிசயங்கள்! எதிர்மறைச் சிந்தனைகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எப்படிச் செயல் புரிவது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
04:07

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அறிவனால் செயலைத் துறப்பது பற்றி அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிறார்: இறைவனை செயல்கள் ஒட்டுவதில்லை; ஏனெனில் இறைவனுக்குச் செயலின் பலனில் விருப்பமில்லை. இவ்வாறு இறைவனைப் பற்றி எவன் தெரிந்து கொள்ளுகிறானோ, அவன் செயல்களால் பாதிக்கப்படுவதில்லை. என்று கூறுனார். மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறார்:

முன்பிருந்த முமுட்சுக்களால் இவ்வாறு அறிந்து செயல்புரியப்பட்டது. எனவே, நீ உன்னுடைய முன்னோர்களால் முன்பு செய்யப்பட்டதைப் போல, (துறவறம் ஏற்காமல்) உனக்குரிய கடமைகøச் செய்வாயாக. முமுட்சுக்கள் என்றால், முக்தியை விரும்புபவர்கள், உண்மையான மன அமைதியை விரும்பும் பெரியோர்கள் என்று பொருள். முக்தி என்றால் செத்த பிறகு சிவலோகம் போவது அல்ல, இங்கேயே, இப்பொழுதே நிம்மதியாக வாழ்வதே முக்தி. செயல்புரிவது பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது; இந்தச் சூழ்நிலையில் எப்படிச் செயல்புரிவது? என்று சிலர் கேட்கிறார்கள்.

மனோபாவனைகள் ஒருகாலத்திலும் மாறுவதில்லை. எல்லோருக்குள்ளும் இறைவன் இருக்கிறார் என்று எண்ணுவது எக்காலத்துக்கும் பொருந்தும். எல்லாக் காலத்திலும், எல்லாவற்றையும் இறைவனுடன் சம்பந்தப்படுத்துவது நம் மரபு. தாய் தந்தையரை தெய்வமாகப் போற்றுதல் என்பது காலங் காலமாக இருக்கின்ற பாவனை. உலகைக் கடவுளாக நினைப்பது என்ற பாவனை எக்காலத்திலும் மாõறது. வளர்கின்ற தொழில் நுட்பமாகவும் இறைவனே காட்சியளிக்கிறார்.

இந்த உலகில் நீ காணும் சிறப்புகள் அனைத்தையும் என்னுடன் தொடர்பபடுத்திப் பார் என்று பகவான் பத்தாவது அத்தியாயத்தில் கூறப் போகிறார். மூன்றாவது அத்தியாயத்தில் நான், ஜனகர், அச்வபதி ஆகியோர் எப்படிச் செயல்புரிந்தோமோ, அப்படிச் செயலாற்று என்று பகவான் அர்ஜுனனுக்கு <உபதேசித்தார்.

பகவான் அர்ஜுனனுக்கு குருவாக இருக்கின்றார். அவர் கட்டளையிட்டால், அர்ஜுனன் அதன்படி நடக்கப் போகிறான். முன்னாளைய முமுட்சுக்கள் இவ்வாறு அறிந்து செயல்புரிந்தார்கள், நீயும் அவ்வாறே அறிந்து செயல்புரி என்று ஏன் கூற வேண்டும்? இதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. சிலர் பழைய சம்பிரதாயங்களை விடவே மாட்டார்கள். அவர்கள் பிடிவாதமாக இருப்பதுபோல நமக்குத் தோன்றும். ஆனால் அவர்களுக்கு அதிகமாக பிரச்னை ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது. நாம் சுதந்திரமாக இருப்பதனால், நிம்மதியாக இருக்கிறோம் என்று சொல்லிவிட முடியாது.

நாம் காலத்துக்குத் தகுந்தாற்போல், நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். அதனைச் சிந்தித்துத்தான் செய்ய வேண்டும். இல்லையென்றால், பலவற்றை நாம் இழந்துவிட நேரிடும். முன்னோர்கள் வழியில் செயல்புரிய வேண்டும் என ஏன் வலியுறுத்திச் சொல்கிறீர்கள் என்று அர்ஜுனன் கேட்கக்கூடும். பகவான் பதில் கூறுகிறார்:

நன்கு கற்றறிந்தவர்களும்கூட, செயல்புரிதல் என்றால் என்ன, சும்மா இருத்தல் என்றால் என்ன என்று அறியாமல் குழம்புகிறார்கள். எதை அறிந்தால் துன்பத்திலிருந்து விடுபடுவாயோ அந்தக் கர்மத்தைப் பற்றி உனக்கு நன்றாகச் சொல்லப் போகிறேன் என்கிறார் பகவான். இறை வழிபாட்டு முறைகளில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டில் மரபு வழியாகக் கடைபிடிக்கப்படும் சில வழக்கங்கள் இருக்கும். அவற்றை மாற்றிவிடக்கூடாது. அதில் ஏதோ ஒரு கருத்து  இருக்கும். நமக்கு தற்போது விளக்கம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதைக் கடைபிடிப்பதில் ஒன்றும் தவறில்லை.

நாம் மெத்தப் படித்தவர்கள் அல்ல; எல்லாம் அறிந்தவர்கள் அல்ல. நம் விருப்பு, வெறுப்புக்குத் தக்கவாறு எதையும் மாற்றிவிடக்கூடாது. எந்த இடத்தில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது, எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது; எவ்வளவு, எப்படி, எங்கு, யாரிடம் சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். செய்ய வேண்டிய செயலின் தன்மையையும் அறிந்துகொள்ள வேண்டும். செய்யக்கூடாதவை எவை என்றும் அறிந்துகொள்ள வேண்டும். செயலின்மை என்றால் என்னவென்றும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் கர்மத்தின் தன்மையானது மிக ஆழமானது, நுண்மையானது என்றும் பகவான் கூறுகிறார். சும்மாஇரு சொல்ற என்றதுமே, அம்மாபொருளொன்றும் அறிந்தலனே என்று பாடிவார் அருணகிரிநாதர். செயல்புரிவதைப் பற்றி ஏன் பெரிதாகக் கூற வேண்டும் என்று தோன்றலாம். செயலாற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. அறிவுபூர்வமாக நாம் செயல் புரிந்ததாக வேண்டும்.

நாம் செய்கின்ற வேலைக்கும், நம் பேச்சுக்கும், மன அமைதிக்கும் தொடர்பு இருக்கிறது. அதனை நாம் சரிசெய்துகொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இளந்தலைமுறையினர், ஏன் விபூதி, குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்? அமாவாசை விரதம் என்றால் என்ன? என்பது போன்று நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். நாம் சரியாக பதில் சொல்லவில்லையென்றால், இவற்றை மூடநம்பிக்கை என்று அவர்கள் ஒதுக்கிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கேட்டால் கற்றுக்கொடுக்க வேண்டியது நம் பொறுப்பு.

நம் சாஸ்திரத்தில் பெரியவர்கள் அறிவோடுதான் அனைத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாம் இயந்திரத்தனமாகப் பின்பற்றுவதால் பல விஷயங்களுக்கு நமக்கு அர்த்தமே தெரிவதில்லை. கர்மத்தின் தன்மையை அறிந்து கொண்டு காரியத்தில் இறங்க வேண்டும். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெவும் (திருக்குறள்: 466) ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான் என்கிறார் திருவள்ளுவர்.

காலை எழுந்தது முதல் படுக்கப் போகும்வரை, அப்படியே இறக்கும்வரை எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது, எச்சூழ்நிலையிலும் நம்மை எப்படி அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்வது மிக முக்கியமாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar