பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
12:07
காரிமங்கலம்: இந்த ஆண்டின், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, காரிமங்கலம் மலைகோவில், சிறப்பு பூஜை இன்று நடக்கிறது. காரிமங்கலம் ஸ்ரீஅபிதகுஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வர் கோவிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, ஸ்வாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
* தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமி பேட்டை அங்காளம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், வெள்ளி கவசம் சாத்துதல், திருவீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.