பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
12:07
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வீரகாஞ்சிபுரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. வீரகாஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நேற்று காலை நடந்தது. இதில் சிறிய, பெரிய வண்டி இரு பிரிவுகளாக, இரண்டு சுற்றுகளில் போட்டிகள் நடந்தது. சிறிய வண்டிக்கான போட்டியில் நான்கு மைல்களும், பெரிய வண்டிக்கு ஆறு மைல்களும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டது. இப் போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உட்பட தென் மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் வந்திருந்தன சிறிய வண்டி போட்டியில் 64 வண்டிகளும், பெரிய வண்டி 64 ம் பங்கேற்றன.
பெரிய வண்டி பந்தயத்தில் முதலிடம் பெற்ற மூன்று பேர் விபரங்கள்: முதல்சுற்று பூசனூர் -பிரித்விஷா, மறுகால்குறிச்சி- கண்ணன், கம்பத்துப்பட்டி -வீரசின்னராஜ். இரண்டாவது சுற்று: உச்சிநத்தம் -ரம்யா, சங்கரப்பேரி -வெள்ளப்பாண்டி,மாமூநைனார்புரம்-ரம்யா சிறியவண்டி: முதல்சுற்று, மேலக்கரந்தை -மெய்யராஜ், மருதூர் -அப்துல்காதர், சிந்தலக்கரை - கருப்புசாமி. இரண்டாவது சுற்று: சிங்கிலிப்பட்டி -பெருமாள்சாமி,சிவகங்கை- மந்தையம்மன், சித்தரங்குடி- மணிமாறன், ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.