பதிவு செய்த நாள்
19
ஜூலை
2014
11:07
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில், ராமாயண ஓவியங்கள் வரையப்பட்ட போர்டுகள் வருகின்றன. ராமாயண காவியத்தில் இலங்கை மன்னர் ராவணனை கொன்று, சிறையில் இருந்த சீதையை, ராமபிரான் மீட்டு தனுஷ்கோடி வந்தார். சிவ பக்தனான ராவணனை கொன்றதால், ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. தோஷத்தை கழிக்க, சீதையுடன், அக்னி தீர்த்த கடற்கரை மணலில் லிங்கம் வடிவமைத்து, பூஜித்து தரிசனம் செய்கின்றனர். ராமரே, சிவனை வழிபட்டதால், இக்கோயிலுக்கு ராமநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. ராமாயண தொடர்புடைய, பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோயில் வரலாறை பக்தர்கள் அறியும் வகையில், எந்த வசதியும் இல்லாதது அனைவருக்கும் ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில், ராமாயண காவியத்தை பிரதிபலிக்கும் வகையில், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் (வடக்கு) ராமாயணம் மற்றும் ராமலிங்க பிரதிஷ்டை ஓவியங்கள் கொண்ட போர்டுகள் பொருத்தும் பணி நடக்கிறது.