விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபி ஷேகம், 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா மற்றும் பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நாளை காலை சிறப்பு அபிஷேகமும், மாலை இசைக் கச்சேரியும், 22ம் தேதி கும்பம் படைத்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.