கள்ளக்குறிச்சிகோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள், சிவகாமி அம்மன்உடனுறை சிதம்பரேஸ்வரர், முத்துமாரியம்மன், திரவுபதி அம்மன், கங்கையம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, அண்ணா நகர் துர்க்கையம்மன், நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர்கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்பூஜைகள் நடத்தப்பட்டது.குளத்துமேட்டு தெருவில் உள்ள அரசமரத்தடிகளரி முனியப்பர் கோவிலில் குத்துவிளக்கு பூஜைநடந்தது. விநாயகர், முனீஸ்வரன் ”சுவாமிக்கு வெள்ளிகவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது.