பதிவு செய்த நாள்
19
ஜூலை
2014
12:07
திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியைமுன்னிட்டு சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் சிறப்பு வழிபாடுநடந்தது. பக்தர்கள் ஏாளமானோர்கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.பழநி: பழநி ஊர்க்கோயில் பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை17 முதல் ஆகஸ்ட் 10 வரை, தினசரிமாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நூறாயிரம் மலர்கள்தூவி, லட்சார்ச்சனை நடக்கிறது.நேற்று ஆடிவெள்ளியை முன்னிட்டு காலை 7மணிக்கு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. மாலை 6.30மணிக்குமேல்ஆபரணாதி அலங்காரம் செய்யப்பட்டு, லட்சார்ச்சனைநடந்தது.பழநி மாரியம்மன் கோயிலில்காலை, மாலையில் சிறப்புஅபிஷேகம், பூஜைகள் நடந்தது. திருஆவினன்குடிகோயிலில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.ரெணகாளியம்மன், முத்துமாரியம்மன் கோயில், லெட்சுமிபுரம்ஆதிபராசக்திகோயில் உள்ளிட்டஅம்மன் கோயில்களில் சிறப்புவழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அகரம்: தாடிக்கொம்பு அருகேஅகரம் முத்தாலம்மன் கோயிலில்ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மன் பட்டுஉடுத்தி, நகை மற்றும் சிறப்பு மலர்அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.சுற்று வட்டாரத்தில் இருந்துஏராளமான பக்தர்கள் அம்மனுக்குபூ, பழம் செலுத்தியும், நெய் தீபம்ஏற்றியும் தரிசனம் செய்தனர். ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு இரண்டு காலசிறப்பு பூஜைகள் நடைபெறும் எனகோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.