ராஜபாளையம்: ராஜபாளையத்தில், நகர் பூ வியாபாரிகள் மற்றும் கமிஷன் கடை சார்பில், ஆடி அன்னதானவிழா நடந்தது. நேற்று காலை திரவுபதிஅம்மன் கோயிலில் இருந்து புதுப்பாளையம் மாரியம்மன்கோயிலுக்கு, பால்குடம், தீர்த்த குடம் பக்தர்கள் எடுத்து சென்றனர். பிற்பகல் அம்மனுக்கு அபிஷேகம், முப்பழ பூஜை நடந்தன. கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரமாண்டமான அம்மன் உருவம், உட்காருவது, பின் எழுந்து சிங்கரதம் ஓட்டுவது போல் அமைக்கப்பட்டு இருந்தது. அம்மன் உருவம் மற்றும் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. மாலை அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.