காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாணி சமேத ஸ்ரீ நித்தீஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தின் நிறைவில் நடந்த தீபாராதனையைத் தொடர்ந்து, கலசத்தில் இருந்த புனிதநீர் உள்ளிட்டவைகளைக் கொண்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பைரவருக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.