மயிலம்: மயிலம் முருகன் கோவில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் நேற்று ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11 மணிக்கு பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். பிற்பகல் 1 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். இரவு 9 மணிக்கு மலர்களினால் உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.