விழுப்புரம்: ஆடி கிருத்திகையையொட்டி விழுப்புரம் பாலமுருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி கிருத்திகையையொட்டி புதுச்சேரி சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு முருகருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 10:00 மணிக்கு தீபாராதனை, 11:00 மணிக்கு வெள்ளிகவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பாலமுருகன் அருள்பாலித்தார். பின்னர் மாலை 6:00 மணிக்கு பாலமுருகர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை செந்தில் அய்யர் செய்திருந்தார். இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.