கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி கார்த்திகை உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2014 03:07
கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின் முறை டிரஸ்டுக்குப் பாத்தியமான ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில், ஆடி கார்த்திகை உற்சவம், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதானத்தில் நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு அபிசேகங்கள் செய்து, வெள்ளிக் கவசங்கள் அணிவிக்கப்பட்டது. மலர் அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை பூஜைகளை தலைமை அர்ச்சகர் ரவி என்ற சுப்பிரமணிய குருக்கள், உதவி அர்ச்சகர் கல்யாணம் குருக்கள் ஆகியோர் நடத்தினர். உற்சவத்தில் முறைகாரர் ரா. இருளப்பன், அம்பலகாரர் ஆர். சக்திவேல் மற்றும் முறைகாரர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உற்சவ ஏற்பாடுகளை உறவின்முறை கணக்கர் வாழவந்தான், தண்டலர் அருணாச்சலம், உதவி தண்டலர் செüந்திரபாண்டியன், பரிஜாதகர் நாராயணன், கோயில் பணியாளர் காந்தி உள்ளிட்டோர் கவனித்தனர்.