பெரியகுளம் : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா, ஜூலை 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஜூலை 16 வரை பத்து நாட்கள் திருவிழா நடந்தது. நேற்று மறுபூஜையை முன்னிட்டு காலை 6 மணியில் இருந்து பக்தர்கள் தீர்த்தொட்டியில் இருந்து பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிதார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.