திருவாடானை : திருவாடானை தெற்குரத வீதி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காப்பு கட்டி விரமிருந்த பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.