ரமலான் மாதத்தின் முடிவில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் நோன்பை முடிக்க உள்ளோம். நோன்பு காலத்தில் பிரதானம் தொழுகை. தொழுகையைப் போன்றே ஏழைவரியும் நமக்கு கட்டாயக் கடமையாக இருக்கிறது. ஏழை வரி என்பது, நமது சம்பாத்தியத்தில், நமது அத்தியாவசியத் தேவை போக எஞ்சிய பணத்தில், நாற்பதில் ஒரு பங்காவது ஏழைகளுக்கு தானம் செய்வதாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், "எவர் ஏழைவரி (ஜகாத்) கொடுக்கவில்லையோ, அவர் தொழாதவர் போன்றவரே! அவர் நரக நெருப்பிற்கு ஆளாவார்,” என்கிறார்கள். அந்த தர்மத்தின் தன்மை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். "நான் இவ்வளவு தர்மம் செய்தேன். தர்மத்தில் என்னை விஞ்சியவர் யாருமில்லை” என பெருமையடிக்கக் கூடாது. "பிறர் பார்ப்பதற்காக தொழுதவன் இணை வைத்து விட்டான். பிறர் பார்ப்பதற்காக நோன்பு நோற்றவன் இணை வைத்து விட்டான். பிறர் பார்ப்பதற்காக தர்மம் செய்தவன் இணை வைத்து விட்டான்,” என்கிறார்கள் அண்ணலார். ஆக, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஜகாத் கொடுங்கள். ஏழைகளின் மலர்ந்த முகத்தைக் காணுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26