பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
விருத்தாசலம்: விருத்தாசலம் ராதாகிருஷ்ண சுவாமி, கம்பத்தாழ்வார் பஜனை மடத்தில், நாலாயிரத் திவ்ய பிரபந்த சேவை பாடப்பட்டது. விரு த்தாசலம் கம்பர் தெருவில் உள்ள ராதா ருக்மணி சமேத ராதா கிருஷ்ண சுவாமி, கம்பத்தாழ்வார் பஜனை மடத்தில், திருச்சித்ரகூடம் ரங்காச்சாரியார் தலைமையில் பாலாலயம் செய்து, திருப்பணி நடக்கிறது. திருப்பணி வேலைகள் செய்து முடிக்க வேண்டி, ரோகிணி நட்சத்திரத்தை யொட்டி நேற்று (23ம் தேதி) திருப்பயிர் நாராயணன் பாகவதர் கோஷ்டியார் தலைமையில் நாலாயிரத் திவ்ய பிரபந்த சேவை பாடப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழு வழக்கறிஞர் துரை, செயலர் ராமையா, பொருளாளர் குணசேகரன், துணைச் செயலர் செல்வராஜ், நிர்வாக செயலர் வழக்கறிஞர் ராமலி ங்கராஜன், பாபு, ராஜேந்திரன், பாஸ்கர், முரளி, நவநீதம், செல்வகணபதி, செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.