சரநாராயண பெருமாள் கோவிலில் 26ம் தேதி அமாவாசை சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2014 12:07
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 26ம் தேதி அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 26ம் தேதி அமாவாசையை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். காலை 7:30 மணிக்கு நித்யபடி பூஜையும், மூலவர் சரநாராயண பெரு மாள் பூவாலங்கி சேவையிலும், 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையிலும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு நடை திறப்பும், 6:00 மணிக்கு நித்யபடி பூஜையும், இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது.