ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடி சேதுமாகாளியம்மன் கோயிலில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். சீனாங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.