பரமக்குடி : எமனேஸ்வரம், பொன்னால் பூண்முலை உமையாள் சமேத எமனேஸ்வரமுடையவர் கோயிலில், கும்பாபிஷேகம் நடந்து, 45 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, மண்டலாபிஷேக விழா நடந்தது. எமதர்மராஜன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, மல்லிகார்ஜூனபுரம் என்று அழைக்கப்பட்ட எமனேஸ்வத்தில், சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் அவரது சாபம் நீங்கி மீண்டும் எமலோக பதவியை அடைந்தார். இந்த சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், மண்டலாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 10.15 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற்று, தீர்த்த குடங்கள் புறப்பாடாகியது. எமனேஸ்வரமுடையவர் உட்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது.