பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
காரைக்குடி : காரைக்குடி தமிழ் இசை சங்கம், மியூசிக் அகாடமி சார்பில், "காரைக்குடியில் திருவையாறு எனும் இசை நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு, திருக்கருகாவூர் ரமணன், டி.கே.சரவணன் நாதஸ்வர நிகழ்ச்சியுடன், ராமநவமி மண்டபத்தில் தொடங்குகிறது. தொலைக்காட்சி மேலாண்மை இயக்குனர் நாச்சியப்பன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை சபா டிரஸ்டி பஞ்சநதம் முன்னிலை வகிக்கிறார். மூன்று நாள் நடக்கும் நிகழ்ச்சிகளில், பின்னணி பாடகர் நாராயணன், கர்நாடக இசை கலைஞர்கள் மோகன் வைத்தியா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சங்கரய்யர், ஹரிஷ், மானாமதுரை நாகலெட்சுமி, திருச்சூர் பார்வதி விஸ்வநாத், அரவிந்த், கோபால கிருஷ்ணன், ஐஸ்வர்யா, ஸ்ரீலெட்சுமி, கமலா நாராயணி, கோவை சாக்ஸபோன் கலைஞர் பாண்டி செல்வி உட்பட 36 இசைக்கலைஞர்கள், 27 பக்கவாத்ய கலைஞர்கள் பங்கேற்கின்றனர். அனைத்து கலைஞர்களும் பங்கேற்கும் பஞ்ச ரத்ன கீர்த்தனை, 27ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. நிறைவு விழாவில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற செயலாளர் குமாரி சச்சு, புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்கின்றனர், என தமிழ் இசை சங்க தலைவர் சொக்கலிங்கம், மியூசிக் அகாடமி தலைவர் அய்யப்பன், செயலாளர் சுவாமிநாதன், செயலர் ராமகிருஷ்ணன், தமிழ் இசை சங்க செயலாளர் சுந்தரராமன் தெரிவித்தனர்.